தற்போதைய செய்திகள்

ஆவடியில் காங். போராட்டம்: ரயில் சேவை பாதிப்பு

15th Apr 2023 12:58 PM

ADVERTISEMENT

சென்னை ஆவடியில் காங்கிரஸ் கட்சியினரின் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை - திருவள்ளூர்; திருவள்ளூர் - சென்னை வழித்தடத்தில் 30 நிமிடத்துக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழவதும் ரயில்களை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை எழும்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அவர் பேசியதாவது:

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது கூட பிரச்னை இல்லை; அவர்கள் செய்த விதம் தான் தவறு, அதைத்தான் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT