தற்போதைய செய்திகள்

உ.பி.யில் காலை 11 மணி நிலவரப்படி 22% வாக்குகள் பதிவு

3rd Mar 2022 12:40 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலையில் 11 மணி நிலவரப்படி 22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக 292 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

இந்தக் கட்டத்தில் அம்பேத்கா் நகா், பல்ராம்பூா், குஷிநகா் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 22 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அம்பேத்கர்நகரில் 23.15 சதவீதம், பல்லியாவில் 21.85 சதவீதம், பல்ராம்பூரில் 18.81 சதவீதம், பஸ்தியில் 23.31 சதவீதம், தியோரியாவில் 19.64 சதவீதம், கோரக்பூரில் 21.7 சதவீதம், குஷிநகர் 23.23 சதவீதம், மராஜ்கஞ்ச் 21.22 சதவீதம், சித்தார்த் நகர் 23.48 சதவீதம், சாந்த் கபீர் நகர் 20.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT