தற்போதைய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைவு

3rd Mar 2022 06:09 PM

ADVERTISEMENT

தங்கம் விலையானது கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்றே குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ஒரேநாளில் ரூ.264 குறைந்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது.

ஒரு கிராம் ரூ.4,847-க்கும் ஒரு சவரன் ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.0.40 உயர்ந்து ரூ.72.50-க்கு விற்பனையாகிறது.


வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................. 4,847
1 சவரன் தங்கம்............................... 38,776
1 கிராம் வெள்ளி............................. 72.50
1 கிலோ வெள்ளி.............................72,500

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,880
1 சவரன் தங்கம்............................... 39,040
1 கிராம் வெள்ளி............................. 72.10
1 கிலோ வெள்ளி.............................72.100

ADVERTISEMENT
ADVERTISEMENT