தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் புதிய எம்எல்ஏக்களுக்கு பயிற்சி

29th May 2021 02:44 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 15ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.

15வது சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 30 எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் மே 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் என்.ரங்கசாமி உள்ளிட்ட 33 எம்எல்ஏக்களும் பதவியேற்றனர்.  இதில், 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல் முறையாக புதிதாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மூன்றாவது மாடி கருத்தரங்கு கூடத்தில், பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்காலிக பேரவைத் தலைவர் க.லட்சுமி நாராயணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

சட்டப்பேரவை நடவடிக்கைகள், எம்எல்ஏக்களின் பணிகள், பேரவைக் கூட்டங்களில் நடந்து கொள்ளும் வழிமுறைகள், விதிமுறைகள் குறித்தும், எம்எல்ஏக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Tags : Puducherry MLA
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT