தற்போதைய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள்: பிசிசிஐ

29th May 2021 01:41 PM

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

14ஆவது ஐ.பி.எல். தொடரின் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 4 அணிகளின் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மே 4ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை இன்னும் குறையாத காரணத்தால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலியுடனான கூட்டத்திற்கு பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியது,

ADVERTISEMENT

மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் துபை, சார்ஜா மற்றும் அபுதாபியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : IPL 2021 UAE BCCI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT