தற்போதைய செய்திகள்

மாநில அரசுகளுக்கு கிடைக்காத தடுப்பூசி தனியாருக்கு கிடைப்பது எப்படி? ப.சிதம்பரம்

29th May 2021 12:32 PM

ADVERTISEMENT

மாநில அரசுகளுக்கு கிடைக்காத தடுப்பூசி தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டுள்ளனர். ஆனால் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து மாநில அரசுகளுக்கு பதில்கள் வரவில்லை.

இதுகுறித்து ப.சிதம்பரம் டிவிட்டரில் எழுப்பியுள்ள கேள்வி,

மாநில அரசுகளின் தடுப்பூசி டெண்டர்களுக்கு உற்பத்தியாளர்கள் கையை விரிக்கிறார்கள். ஆனால், தனியார் கம்பெனிகள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி பெற்று போடப்போகிறோம் என்கிறார்கள். 

ADVERTISEMENT

தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் தனியார் கம்பெனிகளுக்கு  எப்படி கிடைக்கிறது? 

Tags : Corona vaccine P. Chidambaram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT