தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி

29th May 2021 02:35 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக மே 24 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமுடக்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசாணையில் தெரிவித்ததாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அனுமதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை இ-பதிவு செய்யப்பட்ட 4 சக்கர வாகனங்களில் மட்டுமே கூட்டிச் செல்ல வேண்டும்.

மேலும், தங்களது பணியாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.  

Tags : export company lockdown relaxation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT