தற்போதைய செய்திகள்

கோவையில் என்னை வரவேற்க திமுகவினர் வரவேண்டாம்: முதல்வர்

29th May 2021 10:45 AM

ADVERTISEMENT

கோவை பயணத்தின்போது என்னை வரவேற்க திமுகவினர் நேரில் வரவேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை சற்று குறைந்தாலும் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதையடுத்து கோவை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.

இந்நிலையில், திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

ADVERTISEMENT

கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன். அவசரகாலப் பயணம் என்பதால் திமுகவினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags : DMK MK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT