தற்போதைய செய்திகள்

கோவாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு

29th May 2021 03:08 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஊரடங்கு உத்தரவை மே 9 முதல் மே 31 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் 1 வரை ஊடரங்கு நீட்டித்து, மாநிலத்தில் உள்ள விதிமுறைகள் அவ்வாறே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1  மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் மருத்துவக் கடைகள் மற்றும் உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : Goa Lock Down
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT