தற்போதைய செய்திகள்

ரயில்கள் மூலம் 20,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பி வைப்பு

29th May 2021 11:16 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் ரயில்கள் மூலம் இதுவரை 20,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்கள், விமானப்படை விமானங்கள் மூலமாக ஆக்ஸிஜன் டேங்கர்களை விரைவாக கொண்டு செல்லும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து பியூஸ் கோயல் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் 20,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு புதிய இலக்கை எட்டியுள்ளது.

நாட்டிற்கான சேவை செய்யும் பணியில் இதுவரை 300 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Piyush Goyal oxygen train
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT