தற்போதைய செய்திகள்

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; 3 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு

29th May 2021 12:55 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பணியிடமாற்றம் செய்யப்பட்ட 12 பேரில் 3 பேர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,

தீயணைப்புத்துறை டிஜிபியாக கரண் சிங்காவையும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே.விஸ்வநாதனையும் நியமித்துள்ளனர்.

ADVERTISEMENT

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமாரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக சங்கர், சமூக நீதி மற்றும் மனித உரிமையின் கூடுதல் டிஜிபியாக ஜெயராம், சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக அமல்ராஜ் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : Transferred ips officers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT