தற்போதைய செய்திகள்

வேளாண் சட்டத்தை விலக்கிக் கொள்வதுதான் போராட்டத்திற்கான தீர்வு: ப.சிதம்பரம்

DIN

வேளாண் சட்டத்தை விலக்கிக் கொள்வதுதான் போராட்டத்திற்கான தீர்வின் முதல்படி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை கடந்துள்ளது.

இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?

மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி எனத் தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. 

இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இந்த போராட்டம் 6 மாதங்களை நிறைவுசெய்வதைக் குறிக்கும் வகையில் இன்று கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிஸான் மோர்ச்சா சங்கம் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT