அமெரிக்காவுக்கு நான்கு நாள்கள் அரசுப் பயணமாக மே 24ஆம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செல்கிறார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
அமெரிக்காவுக்கு அரசுப் பயணமாக மே 24 முதல் 28 வரை வெளியுறவுத்துறை அமைச்சர் செல்கிறார். நியூயார்க்கில் ஐ.நா. செயலாளர் மற்றும் வாஷிங்டன்னில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து பேசவுள்ளார்.
மேலும், சில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்க-இந்தியா இடையேயான பொருளாதாரம் மற்றும் கரோனா சம்பந்தமான உடன்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT