தற்போதைய செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

20th May 2021 06:19 PM

ADVERTISEMENT

 

2020-21 ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருமான வரி செலுத்த கடைசி நாளாக ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட அவகாசம், தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT