தற்போதைய செய்திகள்

சேலம் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

20th May 2021 09:02 AM

ADVERTISEMENT


கரோனா தடுப்பு பணிகளை பார்வையிடுவதற்காக தனி விமானம் மூலம் சேலம் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சேலம், கோவை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் கரோனா நிலவரம் குறித்து வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார். 

இதற்காக, சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் 9.15 மணியளவில் சேலம் சென்றடைகிறார். காலை 10 மணிக்கு சேலம் இரும்பு உருக்காலையில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 500 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா். பின்னா், சுகாதாரத் துறை, இரும்பாலை அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்துகிறார். அனுமதிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே இதில் பங்கேற்கிறார்கள். 

ADVERTISEMENT

சேலத்தில் ஆய்வை முடித்த பிறகு திருப்பூா், கோவை மாவட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்கிறாா்.

கரோனா மையத்தைப் பாா்வையிடுவதற்காக மட்டுமே முதல்வா் வருவதால், பொதுமக்கள், திமுகவினா் யாரும் இரும்பாலை வளாகத்துக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT