தற்போதைய செய்திகள்

அதிராம்பட்டினத்தில் திடீரென 200 மீ உள்வாங்கிய கடல்

19th May 2021 03:06 PM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் புதன்கிழமை திடீரென 200மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்  கடற்பகுதியில்  கடந்த சில நாட்களாக அதிவேக சூறை காற்று வீசி வந்தது. இதனால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு மீன்பிடிக்க முடியாமல் பாதியிலேயே கரை திரும்பி விட்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை  காற்று குறைவாக இருந்ததால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏரிப்புறக்கரை கிராம மீனவர்கள் கடலுக்கு சென்று பார்த்தபொழுது கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியிருந்தது.  

மேலும் துறைமுக வாய்க்காலில் எந்த நேரமும்  தண்ணீர் நிரம்பி இருக்கும் நிலையில்  தண்ணீரே இல்லாமல் இருந்தது. இதையடுத்து மீீீீனவர்கள் வேறு வழியின்றி   தரை தட்டிய படகை நீண்ட தூரம் இழுத்துச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீண்டும் மீன்பிடித்து விட்டுதிரும்பும் பொழுது இதே நிலையில் கடல் உள்வாங்கி இருந்ததால் மிகுந்த தாமதத்திற்குப் பின்னர் மீனவர்கள் கரை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT