தற்போதைய செய்திகள்

ஊரடங்கு மீறல்: சென்னையில் ஒரே நாளில் 5,428 வாகனங்கள் பறிமுதல்

19th May 2021 02:09 PM

ADVERTISEMENT

சென்னையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மே 24ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி சென்னையில் பலர் வெளியே சுற்றி வருவதாக தொடர்ந்து புகார் எழுந்ததையடுத்து திங்கள்கிழமை முதல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

சென்னையில் நேற்று ஒரே நாளில் கரோனா விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 3,422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 9.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

 கரோனா விதிமுறைகள் மீறி செயல்பட்ட 75 கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT