தற்போதைய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு

17th May 2021 04:06 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தேசிய ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் 18 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் மற்றும் இறப்பு நேரிடுவதாக பலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நோய்த் தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு(ஏஇஎஃப்ஐ) வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடப்பட்டதில் ரத்த உறைதல், ரத்தக்கசிவு அரிதாகவே உள்ளது. மொத்தம் 753 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கே பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக குறைவாகதான் உள்ளது.

மேலும், கோவாக்சின் தடுப்பூசியால் ரத்த உறைதல், ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : Corona vaccine AEFI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT