தற்போதைய செய்திகள்

மே 19-ல் கூடுகிறது சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழு

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு மே 19ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில், அனைத்து கட்சிகளிலிருந்தும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட கரோனா தடுப்பு குழு உருவாக்கப்பட்டது.

அந்தக் குழுவின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 19ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான அடுத்தக் கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

குழுவில் யாா் யாா்? : இந்தக் குழுவில் 13 கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். நா.எழிலன் (திமுக), சி.விஜயபாஸ்கா் (அதிமுக), ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வி.பி.நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பூவை ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT