தற்போதைய செய்திகள்

ஒடிசாவிலிருந்து 30 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய ரயில் தமிழகம் வந்தது!

DIN

திருவள்ளூர்: ஒடிசாவிலிருந்து 30 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய ரயில் தமிழகம் வந்தடைந்தது.

தமிழகத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒடிசா மாநிலம் ரூர்கோலாவில் இருந்து 2 டேங்கரில் தலா 15 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலையில் வந்து சேர்ந்தது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் தொற்றால் பாதிப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படுகிறது. 

தற்போது ஆக்ஸிஜன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டாலும், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜன் தேவைக்காக கேரளம் மாநிலத்திலிருந்து வந்தது. தற்போது கேரளத்திலும் கரோனா பாதிப்பு அதிகம் என்பதால், அங்கிருந்து வந்த ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிசா மாநிலம் ரூர்கோலாவிலிருந்து அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதன்பேரில் தனியார் நிறுவனம் சார்பில் 2 டேங்கர்களை தெற்கு ரயில்வே உதவியுடன்  திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆக்சிஜன் விரைவு ரயில் இருமுறையாக 5 டேங்கர்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போது ஒடிசா மாநிலம் ரூர்கோலாவில் இருந்து தலா 15 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய 2 டேங்கர்கள் விரைவு ரயில்கள் மூலம் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலையில் வந்து சேர்ந்தது.

இதில் 15 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் நிரப்பிய டேங்கர் லாரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையடுத்து மற்றொரு டேங்கர் லாரி சென்னை விமான நிலையம் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல், இனிமேல் கொண்டு வரப்படும் ஆக்ஸிஜன் நிரப்பிய டேங்கர் லாரி மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் நிரப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT