தற்போதைய செய்திகள்

முல்லைபெரியாறு அணைப்பகுதியில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு

DIN


கம்பம்: முல்லைபெரியாறு அணைப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் வினாடிக்கு 1,235 கன அடி தண்ணீர் வந்தது.

தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

வெள்ளிக்கிழமை முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 101.0 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் 79.20 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

இதனால் அணைக்கும் வினாடிக்கு 1,385 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்த நிலையில், சனிக்கிழமை 1,385 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒரேநாளில் 1, 235 கன அடி தண்ணீர் அதிகமாக  வந்தது. அதே நேரத்தில் தமிழகப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை 300 கன அடி தண்ணீர் வெளியேறிய நிலையில், சனிக்கிழமை 200 கன அடி அதிகரித்து, 500 கன அடியாக வெளியேற்றப்பட்டது.

முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி, 128.80 அணியாகவும், நீர் இருப்பு 4,439 மில்லியன் கன அடியாகவும், இருந்தது.

 கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 113 அடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் கூறியது, வானிலை அறிக்கையின்படி, தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவதால் அணையில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என்றார்.

தொடர்ந்து பெய்யும் மழையால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT