தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு

DIN

கன்னியாகுமரி அருகே உள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள புயல் காரணமாக கேரள-தமிழக மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் கன்னியாக்குமரி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,532 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

இந்நிலையில், அணையின் மொத்த கொள்ளளவான 48 அடியில், தற்போது 43.01அடியை எட்டியுள்ளதால், வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. 

புயல் காரணமாக, கேரளம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்ரம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT