தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி பகுதியில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி: எம்எல்ஏ மாரிமுத்து தொடங்கி வைத்தார்

DIN

திருத்துறைப்பூண்டி பகுதியில் நியாய விலைக் கடைகள் மூலமாக சனிக்கிழமை முதல் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை எம்எல்ஏ க.மாரிமுத்து தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின்   அங்காடி எண் 1-ல் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2000 வழங்கி தொடங்கி வைத்தார்.  

மேலும் இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளரும் சிங்களாந்தி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குநருமான ரகுராமன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் சிக்கந்தர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் முருகேசன், கூட்டுறவு சார்பதிவாளர் பிரபாவதி, சிங்களாந்தி கூட்டுறவு வங்கி செயலாளர் வீரசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT