தற்போதைய செய்திகள்

திருக்குவளையில் கரோனா‌ நிவாரண தொகை ரூ. 2,000 வழங்கல்

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித்தொகை முதல் கட்டமாக ரூ.2,000 வழங்கும் நிகழ்வு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த சொந்த ஊரான திருக்குவளையில் சனிக்கிழமை தொடங்கியது.

திருவாய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்பட்ட திருக்குவளை நியாய விலை கடையில் ஊராட்சி மன்ற தலைவர் இல.பழனியப்பன் தலைமையிலும் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா. மலர்வண்ணன் முன்னிலையிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் எம்.செல்வராஜ் நிவாரண தொகையை வழங்கினார்.

இதில் கிளை செயலாளர் கோ.சி.குமார்,இ.ஜோதிபாசு, கோ.சண்முகம்,தங்கதியாகராஜன்,பி.எஸ்.டி.ஜோதிபாசு, ஒன்றிய இளைஞரணி ஆர்.கார்த்தி,திமுக குவளை கணேசன்,பி.டி.தியாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல திருவாய்மூர் ஊராட்சி நியாய விலை கடையில் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மன் தலைமையிலும் திருவாய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆர்.எஸ்.எஸ். சதீஷ் முன்னிலையிலும் எட்டுக்குடி ஊராட்சிக்குட்பட்ட வல்லம் பகுதியிலுள்ள நியாயவிலை கடையில் ஒன்றிய கவுன்சிலர் டி. செல்வம் தலைமையிலும் நிவாரண உதவித்தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டது .

இதேபோல வாழக்கரை  ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர். கலைச்செழியன் தலைமையிலும், மேலவாழக்கரை ஊராட்சி மன்ற தலைவர்  கே.எஸ்.தனபாலன் தலைமையிலும், வலிவலம்  ஊராட்சி மன்ற தலைவர் செ. மணிகண்டன் தலைமையிலும் நிவாரண உதவி தொகையாக ரூ.2000 வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT