தற்போதைய செய்திகள்

பெரியகுளம் பகுதியில் தொடர் மழை

DIN


தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இன்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.  ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18 -ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. 

இந்த புயலுக்கு மியான்மா் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயா் வைக்கப்படவுள்ளது. இந்த புயல் 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, கேரளம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்ரம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

‘டவ்-தே’ புயல் காரணமாக கேரளாவின், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோசு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய  8 கடற்கரையோர மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

‘டவ்-தே’புயலால் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மே 14 ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
               
இந்நிலையில், சனிக்கிழமை காலையிலிருந்து பெரியகுளம் பகுதியில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்மழையால் வராக நதி, கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT