தற்போதைய செய்திகள்

இந்தியாவில் போடப்பட்டது முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

DIN

ரஷியாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, முதல்முறையாக ஹைதராபாதில் இன்று செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் என இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வந்துள்ளது.

இதுவரை இரண்டு கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் இந்தியா வந்துள்ள நிலையில், இன்று முதல்முறையாக ஹைதராபாதின் கஸ்டம் பார்மா நிறுவன தலைவர் தீபக் சாப்ரா செலுத்திக் கொண்டுள்ளார்.

91.6 சதவீத செயல்திறனைக் கொண்ட ஸ்புட்னிக் வி இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஜூலை மாதம் இந்தியாவில் இதன் தயாரிப்பு தொடங்கும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. 

இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்நிறுவனமே ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT