தற்போதைய செய்திகள்

தினமும் வெளியே வரக்கூடாது: மதுரை காவல்துறை எச்சரிக்கை

14th May 2021 07:06 PM

ADVERTISEMENT

மதுரையில் பொருள்களை வாங்க மக்கள் தினமும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மே 24 வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது.

இதற்கிடையே மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் அதிகளவில் வெளியே சுற்றி வருகின்றனர்.

இதையடுத்து மதுரை காவல் ஆணையர் பிரேம் சிங் சின்ஹா தெரிவித்தது,

ADVERTISEMENT

மதுரையில் மக்கள் தினமும் வெளியே வரக் கூடாது. வீட்டிற்கு அருகாமையில்  இருக்கும் கடைகளில் காய்கறி, மளிகை பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளி இல்லாமல் இயங்கும் கடைகள் மூடப்படும். மேலும், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT