தில்லியில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 12 சதவீதமாக குறைந்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தில்லியில் கடந்த 4 வாரமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி முதல்வர் பேசியது,
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 8,500 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 12 சதவீதமாக குறைந்துள்ளது என்றார்.
ADVERTISEMENT
நேற்றைய தினம் தில்லியில் 10,489 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 14.24ஆக பதிவானது.