தற்போதைய செய்திகள்

நாளை இந்தியா வருகிறது 1.50 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

13th May 2021 12:24 PM

ADVERTISEMENT

ரஷியாவிலிருந்து இரண்டாம் கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாளை இந்தியா வருகிறது.

நாட்டில் இந்திய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து முதல் வெளிநாட்டு தடுப்பூசியாக ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-விக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மே 1ஆம் தேதி வந்த நிலையில், நாளை மேலும் 1.50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இந்தியா வரவுள்ளது.

ADVERTISEMENT

Tags : Sputnik V Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT