தற்போதைய செய்திகள்

முழு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

11th May 2021 07:40 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் போது காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் டீ கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதில், பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தொழிற்சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குறைந்த எண்ணிக்கை ஊழியர்களை கொண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இயங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : தளர்வு முழு ஊரடங்கு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT