தற்போதைய செய்திகள்

முதல்வரின் 4 செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

11th May 2021 06:31 PM

ADVERTISEMENT

தமிழக முதல்வரின் நான்கு செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

உள்துறை, தொழில்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய துறைகள் முதல்வரின் செயலாளா் நிலை -1ஆக உள்ள த.உதயச்சந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி, உணவு, மருத்துவம், போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் முதல்வரின் செயலாளா் நிலை -2ஆக உள்ள பி.உமாநாத்திற்கும், முதல்வர் அலுவலக நிர்வாகம், வருவாய், சட்டம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் முதல்வரின் செயலாளா் நிலை-3ஆக உள்ள எம்.எஸ்.சண்முகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், சமூகநலன், கால்நடை, சுற்றுச்சுழல், சுற்றுலா, எம்.எஸ்.எம்.இ. உள்ளிட்ட துறைகளை முதல்வரின் செயலாளா் நிலை-3ஆக உள்ள அனு ஜாா்ஜ்க்கு ஒதுக்கப்பட்டு உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT