தற்போதைய செய்திகள்

நன்கொடை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

11th May 2021 06:47 PM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், சிகிச்சையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கரோனா இரண்டாவது அலையால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பாதுக்கப்பட்டு தற்போது 1,52,389 பேர் சிகிச்சையிலும், அதில் 31,410 பேர் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சையிலும் உள்ளனர். இந்த அலை நமது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பின் மீது கடும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆலைகளை அமைக்கவும், ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்கவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்களும், தொழில் நிறுவனங்களும் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டுகிறேன்.

மக்கள் அளிக்கும் நன்கொடை முழுவதும் கரோனா மருத்துவ கட்டமைப்பிற்கு மட்டுமே செலவிடப்படும். மேலும், செலவீனங்கள் குறித்த வெளிப்படையான தகவல்கள் மக்களுக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

Tags : மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொது நிவாரண நிதி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT