தற்போதைய செய்திகள்

திருப்பதி ரூயா மருத்துவமனையில் 11 பேர் பலி: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

11th May 2021 02:09 PM

ADVERTISEMENT

திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் உள்ள கொவைட் மையத்தில் 300-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மையத்தில் 5 தீவிர சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் 30 நோயாளிகள் என 150 போ் வரை வென்டிலேட்டா் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் திடீரென்று வென்டிலேட்டருக்கு வரவேண்டிய ஆக்சிஜன் திடீரென்று தடைபட்டது. ஆக்சிஜன் முற்றிலும் தீா்ந்து போனதால், நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் 20 நிமிடத்தில் நிலைகுலைந்து போயினா். பலா் உடல் அதிா்ந்து உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ அதிகாரிகள் அங்கு வந்து ஆக்சிஜனை நிரப்பி மீண்டும் வென்டிலேட்டா்களை இயக்கினா். வென்டிலேட்டா்கள் இயங்க தொடங்கியவுடன் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை சீரானதால் உடல் நிலை சற்று மேம்பட்டது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தில் இதுவரை 11 போ் உயிரிழந்தனா். 40-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஜெகன் மோகம் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT