தற்போதைய செய்திகள்

கொல்கத்தா: சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

6th May 2021 02:47 PM

ADVERTISEMENT

கொல்கத்தாவில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சைக்கிள் மற்றும் நடந்தே செல்லத் தொடங்கியுள்ளார்கள்.

கரோனா இரண்டாம் அலை மேற்கு வங்கத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகமாகி வருகிறது.

இதைத் தொடா்ந்து, கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரவுநேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நோய்த் தொற்று குறையாததால் மாநிலம் முழுவதும் ரயில் சேவை ரத்து, பேருந்து சேவையில் கட்டுப்பாடுகள் போன்ற புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்

இதையடுத்து, விரைவில் முழு பொதுமுடக்கம் விதிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்ததால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சைக்கிள் மற்றும் நடந்தே செல்லத் தொடங்கியுள்ளார்கள்.

கடந்தாண்டு பொதுமுடக்கத்தின் போது நாடு முழுவதும் பல இடங்களில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT