தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: மருத்துவமனைக்கு வெளியே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

6th May 2021 05:27 PM

ADVERTISEMENT

ஜம்மு - காஷ்மீர் மருத்துவமனையில் படுக்கை வசதி பற்றாக்குறையால் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை வெளியே சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், படுக்கைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிடி மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைக்கு வெளியே உள்ள வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதனால் உடனிருப்போருக்கும், அந்த வழியாக செல்லும் பிறருக்கும் எளிதாக கரோனா பரவும் சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT