தற்போதைய செய்திகள்

ம.பி.யில் மே 15 வரை முழு ஊரடங்கு

6th May 2021 06:29 PM

ADVERTISEMENT


மத்திய பிரதேசத்தில் மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் செளகான் அறிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில் கரோனா 2-ம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி, அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். 

இது குறித்து பேசிய முதல்வர் சிவராஜ் செளகான், கரோனா 2-வது அலை மாநிலத்தில் அதிகமாகப் பரவி வருகிறது.

தொற்று அதிகரித்து வருவதால் மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.  

ADVERTISEMENT

கரோனா அதிகம் பரவும் இடமாக திருமணங்கள் அமைந்துள்ளதால், மே இறுதி வரை திருமண விழா நடத்துவதை தவிர்க்குமாறு கேட்டிக் கொண்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் கரோனா 2-வது அலை அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.  

Tags : madhya pradesh Lock Down
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT