தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அமைச்சரவைக் கூட்டம்

6th May 2021 07:12 PM

ADVERTISEMENT

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.

தமிழக முதல்வராக நாளை காலை மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ள நிலையில், புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுடன் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் குறித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் புதிதாக பதவியேற்கும் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டமாகும். 

ADVERTISEMENT

அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாலை 5.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT