தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் கார் மீது தாக்குதல்

6th May 2021 02:03 PM

ADVERTISEMENT

 மேற்கு வங்கத்தில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் வி.முரளிதரன் வாகனம் மீது திரிணமூல் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானவுடன், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. வன்முறையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த பல தொண்டா்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் திரிணமூல் தொண்டா்களால் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், வன்முறை குறித்து ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்கம் சென்ற மத்திய அமைச்சர் வி.முரளிதரன் கார் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து வி.முரளிதரன் வெளியிட்டுள்ள டிவிட்டரில்,

ADVERTISEMENT

மேற்கு மிட்னாபூர் பகுதியில் எனது கார் மீது திரிணமூல் குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில், காரின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, எனது ஊழியர்கள் தாக்கப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT