தற்போதைய செய்திகள்

இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பிய அமெரிக்கா, அயர்லாந்து

5th May 2021 12:18 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா, அயர்லாந்து நாடுகளிலுருந்து அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

இதனால் நாட்டில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் அமெரிக்காவிலிருந்து 5வது கட்டமாக 545 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தில்லி விமான நிலையம் வந்தடைந்தது.

மேலும், அயர்லாந்து நாட்டிலிருந்து இரண்டாம் கட்டமாக 2 ஆக்ஸிஜன் தயாரிக்கும் உபகரணங்கள், 548 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 365 ஆக்ஸிஜன் வெண்டிலேட்டர்கள் மற்றும் சில மருத்துவ உபகரணங்களை இன்று தில்லி வந்தடைந்தது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT