தற்போதைய செய்திகள்

சென்னையில் நாளைமுதல் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம்

5th May 2021 11:28 AM

ADVERTISEMENT

சென்னையில் நாளை(மே 6) முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாட்டில், பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் இயக்கம், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: இங்கே கிளிக் செய்யவும்...

ADVERTISEMENT

இதையடுத்து இன்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் நிலையில் சென்னையில் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags : MTC corona restrictions
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT