தற்போதைய செய்திகள்

தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை தராவிடில் வேலைநிறுத்தம்: ஏர் இந்தியா விமானிகள்

4th May 2021 02:02 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னிரிமை வழங்கவில்லை என்றால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ஏர் இந்தியா விமானிகள் சங்கத்தினர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, கரோனா பேரிடரை சமாளிக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து ஏர் இந்தியா விமானிகள் மற்றும் இந்திய வணிக விமானிகள் சங்கத்தினர் விமானத்துறை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

ADVERTISEMENT

18 வயதுக்கு மேற்பட்ட ஏர் இந்தியா விமானங்களில் உள்ள குழுவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தவில்லை என்றால், நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Tags : air india Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT