தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மே 6 முதல் ரத்து செய்யப்படும் ரயில்கள்

4th May 2021 04:48 PM

ADVERTISEMENT

கரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் சிறப்பு ரயில்களை மே 6ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் சிறப்பு ரயில்கள் சிலவற்றை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தில்,

ADVERTISEMENT

பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் தினசரி சிறப்பு ரயில்கள் மே 6 முதல் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

புறப்படும் நேரம் ரயில் எண் புறப்படும் இடம் சேரும் இடம்
காலை 7.05 02627 திருச்சி திருவனந்தபுரம்
காலை 11.35 02628 திருவனந்தபுரம் திருச்சி
காலை 6.20 06607 கண்ணூர் கோவை
காலை 2.20 06608 கோவை கண்ணூர்

 

Tags : train cancel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT