தற்போதைய செய்திகள்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

4th May 2021 06:52 PM

ADVERTISEMENT

தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் தொடங்கியுள்ளது.

இதில், சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட 125 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 கூட்டணி கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

வருகிற மே 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், நாளை மாலை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.

Tags : MK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT