தற்போதைய செய்திகள்

மோடி தலைமையில் நாளை(மே 5) கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

4th May 2021 08:25 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் தில்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அதிகரித்து வரும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைநகர் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருந்துகள் இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ADVERTISEMENT

 

Tags : modi cabinet meeting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT