தற்போதைய செய்திகள்

ஆட்சி அமைக்க நாளை(மே 5) உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்

4th May 2021 04:04 PM

ADVERTISEMENT

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை(மே 5) மாலை 6.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க  உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மே 7ஆம் தேதி முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இதையடுத்து நாளை மாலை 6.30 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து திமுக தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ஆளுநர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் 200 பேர் மட்டுமே பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK MK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT