தற்போதைய செய்திகள்

ஜே.இ.இ. மெயின் தேர்வு ஒத்திவைப்பு

4th May 2021 03:51 PM

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜே.இ.இ. மெயின் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் 2021 தோ்வு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மாா்ச் மாதத்திலும் தோ்வு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தோ்வு நடைபெறும். ஒரே மாணவா் 4 முறையும் தோ்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். 

ஏற்கனவே ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த மெயின் தேர்வு மே 24 முதல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வுகள் கரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : JEE exam postponed
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT