தற்போதைய செய்திகள்

மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி

3rd May 2021 01:11 AM

ADVERTISEMENT

ஈரோடு:  மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலடசுமி ஜெகதீசன் 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதியிடம் தோல்வியடைந்தார். 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் டாக்டர் சி.சரஸ்வதி போட்டியிட்டார். அவர் மொத்தம் பதிவான 1 லட்சத்து 82 ஆயிரத்து 446 வாக்குகளில் 78 ஆயிரத்து 125 வாக்குகள் பெற்றார். இதில் 472 தபால் வாக்குகள் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 1,435 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 77, 844 ஓட்டுகள் பெற்றார்.

இதனால் பாஜக  வேட்பாளர் 281 வாக்குகள் அதிகம் பெற்றார். எனவே வெறும் 281 வாக்குகளில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மொடக்குறிச்சி தொகுதியின் தொடக்கத்தில் திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் திடீர் என்று மாற்றம் வந்தது. அதில் இருந்து டாக்டர் சரஸ்வதி முன்னிலையில் இருந்தார். இறுதியில் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தின் ஒரே பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

வாக்குகள் விவரம்
மொடக்குறிச்சி தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கே.பிரகாஷ் (நாம் தமிழர் கட்சி)  12,944
ராஜேஷ்குமார் (மக்கள் நீதி மய்யம்) -4,574
டி.தங்கராஜ் (அமமுக)  1,547.
நோட்டா 2,342.

ADVERTISEMENT

Tags : Modakkurichi Election Result
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT