தற்போதைய செய்திகள்

அரியலூரில் மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா வெற்றி

3rd May 2021 01:02 AM

ADVERTISEMENT

அரியலூர்: அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனைவிட 3,234 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அரியலூர் தொகுதியில் 2,64,715 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.இவர்களில் 2,23, 800வாக்காளர்கள் வாக்களித்தனர்.

பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குப் பெட்டி மாவட்ட ஆட்சியர் த.ரத்னா மேற்பார்வையில், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, தேர்தல் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் வாக்குகளை எண்ணும் பணியைத் தொடங்கினர்.

சரியாக காலை 8.30 மணிக்கு பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 14 மேஜைகளிலும் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்து நடைபெற்றது.

ADVERTISEMENT

முதல் சுற்றிலேயே மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை காட்டிலும் 1,041 வாக்குகள் முன்னிலை பெற்றார். 2 ஆவது சுற்றில் 1,547 வாக்குகளும், 3 ஆவது சுற்றில் 1,789 வாக்குகளும் முன்னிலை பெற்றார்.
தொடக்க முதலில் இருந்து முன்னிலை பெற்று வந்த கு.சின்னப்பா, 27 ஆவது சுற்றுகளின் முடிவில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை விட3,234 வாக்குள் அதிகம் பெற்று முதல் முறையாக அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அஞ்சல் வாக்குகளையும் சேர்த்து ஒவ்வொரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
1.கு.சின்னப்பா(மதிமுக)}103,975
2.தாமரை எஸ்.ராஜேந்திரன்(அதிமுக)}100741
3.கு.சுகுணா(நாம் தமிழர்)}12,346
4.துரை.மணிவேல்(அமமுக)}2,044
5.பி.ஜவகர்(ஐஜேகே)}905
6.வி.சவரிஆனந்தம்(பிஎஸ்பி)}486
7.தங்க.சண்முகசுந்தரம்(தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு)}1,037
8.ஜெ.குமார்(சுயே)}78
9.வி.சிவதாசன்(சுயே)}159
10.பி.தேவா(சுயே)}133
11.எம்.மணிகண்டன்(சுயே)}540
12.கே.ரமேஷ்(சுயே)}767
13. எஸ்.ரவிச்சந்திரன்(சுயே)}629
14.நோட்டா}1,386

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT