தற்போதைய செய்திகள்

இது வெற்றிக்கான நேரம் அல்ல; கரோனாவுக்கு எதிராக போராடும் நேரம்: கேரள முதல்வர்

2nd May 2021 05:59 PM

ADVERTISEMENT

தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடுவதற்கான நேரம் இதுவல்ல,  கரோனாவுக்கு எதிராக போராட வேண்டிய நேரம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 93 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது,

இடது முன்னணிக்கு ஆதரவாக கேரள மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். கரோனா தொடர்ந்து பரவி வருவதால், வெற்றியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான நேரம் இதுவல்ல. கரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதற்கான நேரம் இது.

ADVERTISEMENT

இந்த மாபெரும் வெற்றியை கேரள மக்களுக்கு தாழ்மையுடன் அர்ப்பணிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT