தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு தில்லி முதல்வர் வாழ்த்து

2nd May 2021 03:51 PM

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது.

இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT